×

கூடுதல் விலைக்கு மது விற்றால் சஸ்பெண்ட்: டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிகபட்ச விற்பனை விலையை விட, பாட்டில் ஒன்றிற்கு பத்து ரூபாய் விலை அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுவதாக வருவதாக புகார் கூறப்படுகிறது. மேலும் மதுவின் அளவுக்கு ஏற்ப ஆப் என்றால் 20 ரூபாயும், புல் பாட்டில் என்றால் 40 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. இதுவே, உயர் ரக மதுபானங்களுக்கு இன்னும் கூடுதலாக வசூல் செய்யப்படுகிறதாக என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு புகார் சென்றது. புகாரின் அடிப்படையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் செய்யும் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ய கூடாது என அறிவுறுத்தினாலும், ஒரு சில இடங்களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் வசூலிக்கும், ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் அனைத்து மண்டல மேலாளர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக ரூ.10 மற்றும் அதற்கு மேல் விலை வைத்து மதுபானங்களை விற்பனை செய்கின்ற கடைப் ஊழியர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களும் மேற்காணும் அறிவுறுத்தலின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக ரூ.10 மற்றும் அதற்கு மேல் கூடுதல் விலை வைத்து மதுபானங்களை விற்பனை செய்கின்ற ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்திட அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுரை வழங்கிட வேண்டும். இதில் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்கள் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தாங்களும் பொறுப்பேற்க நேரிடும்.

The post கூடுதல் விலைக்கு மது விற்றால் சஸ்பெண்ட்: டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tasmac administration ,Chennai ,Tasmak ,Tamil Nadu ,
× RELATED காலி மது பாட்டில்களை திரும்ப பெறும்...